ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளால் மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக வே.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கையொழுத்திட்டு நியமனம் வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று வரை செயற்பட்டு மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தேன்.
இருந்த போதும் ஜக்கிய தேசிய கட்சிக்குள் பல முரண்பாடுகள் இருப்பதனால் தொடர்ந்து செயற்ட முடியாத காரணத்தில் எனது சுய விருப்பின் காரணமாக இப் பதவியிலிருந்து நான் இன்றில் இருந்து விலகிக்கொள்வதுடன் இந்த பதவி விலகல் கடித மூலம் கட்சி செயலாளருக்கு அனுப்பியுள்ளேன்.
அதேவேளை 2020 பாராளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்பதுடன் எந்தவெரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடபோவதில்லை.
அரசியலில் இருந்து செயற்பட்டதை வெளியில் இருந்து கொண்டு வேறு வழிகள் மூலம் பல மடங்குகள் சிறப்பாக சேவை செய்யவுள்ளேன்.
எனவே மக்கள் சுயமாக சிந்தித்து தமது வாக்குகளை வீணடிக்காமல் ஆசனங்களைப் பெறக்கூடிய நபர்களுக்கு மாத்திரம் தங்களது வாக்குகளை வழங்கும்படி அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.