சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையே இன்று இடம்பெற்ற (17) கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இவ்வாறு தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.