இலங்கையின் வானிலையில் இன்று மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.
நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது.
அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை அவதான மையம் எதிர்வு கூறியுள்ளது.