தென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது.
மேலும், வட – தென் கொரிய மக்கள் சந்திக்கும், டைமன்ட் மலைவாச விடுதியிலும், இராணுவத்தினர் நிறுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வட கொரியாவின் மிரட்டலை சமாளிக்க, தமது இராணுவம் தயாராகவே உள்ளதாக, தென் கொரியா கூறியுள்ளது.
தென் கொரிய எல்லையில், கேசாங் நகரில் இருந்த தகவல் உதவி மைய கட்டடம் தகர்க்கப்பட்டுள்ள நிலையில், நிலம், நீர் வழி எல்லைகளில், வட கொரியா இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது.
இந்தநிலையில் இதை மேலும் அதிகரிக்கும் வகையில், எல்லை தாண்டி கேசாங் நகருக்குள், இராணுவத்தை அனுப்ப உள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை விமர்சிக்கும் மற்றும் மனித உரிமைகளை ஆட்சி புறக்கணிப்பதும் போன்ற வழக்கமாக பலூன்கள் வழியாக அனுப்பப்படும் எல்லை தாண்டிய துண்டுப்பிரசுரங்களினால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் சில காலமாக அதிகரித்து வருகிறது.