ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வந்த மக்கள் பிரதிநிதிகள் சிலரின் தகுதிகளை ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த சில பிரதிநிதிகள் மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்தவர்களும், நாட்டுக்கு போதைபொருள் கடத்தி வந்தவர்களும், ரயிலில் தங்கச் சங்கிலியை பறித்தவர்களுமாகவே இருந்தனரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேரும், மணல் அகழும் அனுமதிமை பெற்ற 75 பேரும், நாட்டுக்கு போதைபொருள் கடத்தி வரும் இருவரும், ரயிலில் தங்கச் சங்கிலியை பறித்த ஒருவரென பலர் அங்கு இருந்தனர்.
இதுவே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக வந்தவர்களின் தகுதியென அவர் தெரிவித்துள்ளார்.