மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதெனில் மூவின மக்களின் ஆதரவும் எமக்கு தேவை. இதை அடைய மூவின மக்களையும் இணைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை நம் முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகளுடன் நேற்று முன்தினம்(17) நடந்த சந்திப்பில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவின்றி நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறலாமென சில பெரமுன உறுப்பினர்கள், ஊடகவியலாளர் சந்திப்புக்களில் தெரிவித்து வருகிறார்கள். யாரும் இப்படியான பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லையென்பதற்காக, பொதுத்தேர்தலில் அவர்களை புறக்கணித்து விட்டு, நாம் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது. அப்படி செயற்பட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாது என தெரிவித்துள்ளார்.