யாழ்ப்பாணம் கற்கடதீவில் 58 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பெறுமதி 6 மில்லியன் ரூபா எனவும் குறிப்பிடப்படுகின்றது
கற்கடதீவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளக்கஞ்சா கொண்டுவரப்பட்ட டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.