இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 1948 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது வரை 1446 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரையில் 756 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.