லடாக் மோதலை அடுத்து, சீனா பிடித்து வைத்திருந்த இந்திய இராணுவ வீரர்களை பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலுக்கு பின்னர் இந்திய இராணுவ அதிகாரிகள் உள்பட 10 பேரை சீனா பிடித்து வைத்ததாகவும், பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும் செய்திகள் வெளியானது.
ஆனால் நாங்கள் எந்த இந்திய வீரர்களையும் பிடித்து வைக்கவில்லை என்று சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாயோ லிஸியான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜாயோ லிஸியான் கூறுகையில் ‘‘எனக்கு தெரிந்த வரை, தற்போது வரை சீனா இந்திய இராணுவ வீரர்கள் யாரையும் பிடித்து வைக்கவில்லை. இராணுவ தரப்பு மற்றும் ராஜதந்திர அளவில் இந்த பிரச்சினையை முடிவுக் கொண்டு வர பேச்சுவார்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ரேநத்தில் இந்திய இராணுவத்தால் சீன இராணுவ வீரர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்களா? என்று கூற இயலாது. லடாக் எல்லையில் நடந்த சம்பவத்திற்கு இந்தியா பக்கம்தான் முழு பொறுப்பு உள்ளது’’ என்றார்.