தமிழகத்தில், கணவனை, காதலனை வைத்து அடித்து கொன்றுவிட்டு, மனைவி அவரை ஏரிக்கரை மரத்தில் பிணமாக தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இருக்கும், மேல்வயலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(32). விவசாயியான இவருக்கு சாந்தி(30) என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 17-ஆம் திகதி, அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை மரத்தில் கார்திகேயன் பிணமாக தூக்கில் தொங்கிய படி கிடைந்தார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் கார்த்திகேயன் மரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கார்த்தியேன் அன்றைய தினம், ஏரிக்கரைக்கு இயற்கை உபாதம் கழிக்க சென்றுவிட்டு வருவதாக சாந்தியிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
பிரேதபரி சோதனையில், கார்த்திகேயன் உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்திருக்கலாம், என்ற சந்தேகத்தில் பொலிசாரின் பார்வை சாந்தி பக்கம் திரும்பியது.
அப்போது, சாந்திக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி என்பவருக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
கரும்பு வெட்ட கிராமத்துக்கு வரும்போதுதான் தங்கமணியுடன் சாந்தி குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் சாந்தியுடன் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு கார்த்திகேயன் எப்படியும் தடையாக இருப்பார் என்பதால், சாந்திதான் தங்கமணியையும், அவரது நண்பரையும் ஏரிக்கரைக்கு கொலை செய்ய அனுப்பி வைத்துள்ளார்.
அதன் படி, கார்த்திகேயனை சந்தித்த தங்கமணி, ஏரிக்கரையிலேயே மது ஊற்றி கொடுத்துள்ளார். போதை ஏறியதுமே தங்கமணி, கார்த்திகேயனின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.
தற்கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காக அவரது லுங்கியை அவிழ்த்து மரத்தில் தொங்கவிட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சாந்தியின் இந்த பழக்கம் குறித்து கார்த்திகேயனுக்கு முற்றிலும் தெரியாது. இது எப்படியும் தெரிந்துவிடும் என்பதால், அவரை முன்கூட்டியே காதலனுடன் சேர்ந்து சாந்தி கணவனை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார்.
கார்த்திகேயனும், தன்னை எதற்காக டிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள் என்றே தெரியாமல் உயிர் இழந்துவிட்டார்.