இந்தியாவில் 13 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக அவர் தந்தையே கொலையாளி என தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சேர்ந்தவ்ர் லோகேஷ். இவர் மகள் சப்னா (13). சப்னா மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் அங்குள்ள தனிமையான இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தலையில் பலத்த காயம் இருந்தது, சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கிய நிலையில் அருகிலிருந்த சிசிடிவி கமெராவை ஆய்வு செய்தனர். அப்போது 45 வயது மதிக்கத்தக்க நபருடன் சப்னா நடந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சப்னாவுக்கு தெரிந்த நபர் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என பொலிசார் கருதினார்கள்.
இது குறித்து பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் சப்னா தந்தை லோகேஷ் மட்டும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வந்தார்.
இதனால் அவர் மீது சந்தேகமடைந்த பொலிசார் தங்கள் பாணியில் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் மகளை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், என் மனையின் செயல் மற்றும் நடத்தை எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து மனைவியை பழிவாங்க என் மகளை கொலை செய்ய முடிவெடுத்தேன்.
அதன்படி தனியாக சப்னாவை அழைத்து சென்று சுத்தியால் தலையில் அடித்து கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து லோகேஷை கைது செய்த பொலிசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.