எம்மீது உள்ள தனிப்பட்ட பழிவாங்கலிற்காகவே 19வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அது இப்பொழுது கேலிக்கூத்தாகி விட்டது. 19வது திருத்தத்தை கொண்டு வந்தவர்களே, அதனை இப்பொழுது மாற்ற வேண்டுமென கூறுகிறார்கள். இந்த தேர்தலில் அமோக வெற்றியீட்டினாலே 19வது திருத்தத்தை மாற்றியமைக்கலாம். அதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எமக்கு தாருங்கள்.
ஜனாதிபதி மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களை பலம்மிக்கதாக மாற்றுவதற்கும் எமக்கு நாடாளுமன்றத்தில் பலம் அவசியம் என தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின்குருநாகல் மாவட்ட தேர்தல் அலவலகத்தை நேற்று திறந்த வைத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் முரண்பட்ட விதத்தில் செயற்பட முடியாது. நாட்டை நிர்வகிக்க இரண்டு தலைவர்களும் ஒன்றிணைந்த செயற்பட வேண்டும். இரண்டு தலைவர்களும் ஒன்றிணைந்த செயற்படாவிட்டால் ஏற்படும் விளைவுகள் நல்லாட்சி அரசில் ஏற்பட்டது.
இவர்களின் முரண்பாடுகளால் நாடு என்ற ரீதியிலும், தேசிய ரீதியிலும் பலவீனமடைந்துள்ளோம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் இதனை திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.