2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதியாட்டத்தில்ஈ ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றது என்பதை மஹிந்தானந்த அளுத்கமகே உறுதிசெய்துள்ளதால், அது குறித்து விசாரணை நடத்தும்படி சிஐடி மற்றும் ஐசிசியின் இலஞ்சம் ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
“நான் இந்த குற்றச்சாட்டுகளை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும், பல ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்திலும் தெரிவித்தேன். எவ்வாறாயினும், எனது குற்றச்சாட்டை அமைச்சர் அலுத்கமகே இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்” என்றார்.
“ஐ.சி.சி ஊழல் தடுப்பு பிரிவின் தலைவரிடம் நான் தெரிவித்த குற்றச்சாட்டுக்களையும், அமைச்சர் அளுத்கமகேயின் புதிய குற்றச்சாட்டுகளையும் விசாரணை செய்யும்படி அழைக்கிறேன்” என்றார்.
“கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றது என்பதற்கான சில ஆதாரங்கள் என்னிடமுள்ளன. இதில் தொடர்புள்ள சில நபர்களிற்கு, ஆட்டநிர்ணய சதியின் பரிமாற்றமாக சொகுசு ஜீப்பை பெற்றார்கள் ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.