பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இருந்து ஸ்ரீலங்கா விலகிச்சென்றுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் மற்றும் உலகில் ஜனநாயகம் தொடர்பான 2019 வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜி.எஸ்.பி .சலுகையை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என்பதே ஆகும். ஆனால் குறித்த வாக்குறுதியில் இருந்து ஸ்ரீலங்கா பின்வாங்கியுள்ளது.
புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது இடைக்கால அரசாங்கமும் எடுத்த முக்கியமான கொள்கை தீர்மானங்களில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில்லை என்பதே ஆகும்.
இதேவேளை உத்தேச புதிய சட்டமூலத்தையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.