இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று (22) பின்னிரவு அடையாளம் காணப்ட்டுள்ளார். நேற்று 28 பேர் குணமடைந்துள்ளனர்.
மாலைதீவிலிருந்து வந்த ஒருவரே நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளதோடு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,512 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 21, 22 ஆகிய திகதிகளில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, இறுதியாக கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி (65 நாட்களுக்கு முன்னர்) இவ்வாறு கொரோனா தொற்றிய எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 938 பேர் கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 901 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 785 ஆக உயர்ந்துள்ளது.


















