இலங்கை பெண் ஒருவர் Zoom தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டுபாயில் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் திருமணம் தடைப்பட்டுள்ளது.
பயண கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பிற்கு வர முடியாத நிலையில் வீடியோ அழைப்பிலேயே இந்த பெண் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
நதீக்கா – கயான் என்ற இந்த இலங்கை தம்பதி பல ஆண்டுகளாக திருமணம் செய்வதற்கு எதிர்பார்த்திருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் திருமணம் செய்ய முடியவில்லை.
எனினும் அதே திகதியில் குறித்த இருவரும் Zoom அழைப்பில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
நதீக்கா டுபாயில் உள்ள நிலையில் அவர் திருமணம் செய்யவிருந்தவர் கொழும்பில் இருந்தார். இதன் காரணமாக ஜுன் மாதம் 10ஆம் திகதி இலங்கை கலாச்சாரத்திற்கமைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை Zoom அழைப்பில் அழைக்கப்பட்டு திருமணம் செய்யப்பட்டுள்ளது.
கலாச்சார முறைக்கமைய திருமணம் முடிந்தவுடன், டுபாயில் உள்ள கயானின் வீட்டிற்கு நதீக்கா சென்றுள்ளார்.
“பெரிய அல்லது சிறிய திருமணங்கள் தேவையில்லை, உங்களை நேசிக்கும் நபர்கள் உங்களுடன் இருக்க வேண்டியது அவசியம்.
நாங்கள் கிட்டத்தட்ட இணைக்கப்பட்டுள்ளோம். எனது திருமண நாளில் எனது குடியிருப்பிற்கு வந்த சில நண்பர்கள் என்னுடன் இருந்தார்கள்.
நாங்கள் இணைய வழியில் சம்பிரதாயங்களை பரிமாறிக்கொண்ட போது எனது பெற்றோர், வருங்கால கணவர், அவரது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் இணையத்தளத்தில் இருந்தனர்.
எங்கள் பெற்றோர் கமராவில் சில சடங்குகளைச் செய்தனர், பின்னர் எனது பெற்றோர் கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
நான் எனது வாக்குறுதியைக் ஏற்றுக்கொண்டு கயானின் டுபாய் குடியிருப்பில் குடியேறினேன், இப்போது அவருடைய மனைவியாக எனது புதிய வீடாக இது காணப்படும்” என நதீக்கா குறிப்பிட்டுள்ளார்.


















