முன்னாள் பிரதியமைச்சர் கருணாவுக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையே எவ்வித தொடர்பும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இவரது பெயரை உள்ளடக்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டதாக கருணா கூறும் கூற்று பொய்யாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கு போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு தொடர்பில்லாதவர் குறிப்பிடும் கருத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது எனவும் பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.