அரசாங்கம் கருணாவிற்கு பல கௌரவமான பதவிகளை வழங்கியநிலையில் அவரின் இராணுவத்தினரை கொன்றமை குறித்து தெரிவித்த கருத்து தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என ஜேவிபியின் பிரசார செயலாளர் டில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த தனிநபர், பின்னர் பக்கம் மாறி அவர் அரசாங்கத்துடன் சேர்ந்தவர் அவருக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது சுதந்திரக்கட்சியின் உபதலைவர் பதவியும் வழங்கப்பட்டது என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவ்வேளை கேள்வி எழுப்பியவேளை கருணா மாறிவிட்டார் அவர் சிறந்த பிரஜை என பதிலளிக்கப்பட்டது .
எனினும் தற்போது தேர்தலில் போட்டியிடும் கருணா தற்போது இலங்கை இராணுவத்தினை கொன்றதாக பெருமை அடிக்கின்றார் என தெரிவித்துள்ள அரசாங்கம் இந்த விடயத்தில் தனது நிலைப்பாட்டையும் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் வெளிப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


















