ரஷ்யாவை சேர்ந்த இளம் வயது கோடீஸ்வர பெண், மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்தவர் Anastasia Tropitsel (18). இவர் blogger ஆக இருந்த நிலையில் தன்னுடைய திறமையால் 15 வயதிலேயே கோடீஸ்வரராக உயர்ந்தார்.
இந்த நிலையில் லாக்டவுனுக்கு முன்னரே இந்தோனேசியாவின் பாலிக்கு தனது காதலன் Viktor Maydanovich (30) உடன் Anastasia சுற்றுலா சென்றார்.
மோட்டார் சைக்கிள் பிரியரான Anastasia அங்கு வேகமாக அதை ஓட்டிய போது திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கில் விபத்தை சந்தித்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டர் சைக்கிளை ஓட்டுவதற்கு முன்னர் அவர் கடைசியாக எடுத்த கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
பலருக்கு முன்னுதாரணமாக இருந்த Anastasiaக்கு சமூகவலைதளத்தில் மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ் உள்ளனர்.
அவர்களிடம், Anastasia உங்களால் முடியாததைச் செய்ய நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என அடிக்கடி கூறுவார்.
Anastasia குறித்து அவர் காதலன் கூறுகையில், என் அன்புக்குரிய பெண் தற்போது என்னுடன் இல்லை
தயவுசெய்து நண்பர்களே உங்கள் நல்ல எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனையுடன் உங்கள் கடைசி பிரியாவிடையை அவளுக்கு சொல்லுங்கள் என கூறியுள்ளார்.