மாவனெல்ல, அரநாயக்க பொலிஸ் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
மதுபானம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு பதிலாக வேறு ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 60,000 ரூபாய் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, வேறு ஒருவரை நீதிமன்றத்தில் இவர்கள் நிறுத்தினர்.