மொனராகலை சிறைச்சாலையினுள் கைதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இதற்கு முன்னரும் சிறைச்சாலையினுள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று பிற்பகல் சிறைச்சாலை வைத்தியசாலையினுள் கைதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. பகிணிகஹவெல, மெதகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த கைதியின் சடலம் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மொனராகலை சிறைச்சாலை மற்றும் மொனராகலை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.