இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக, இன்று முதல் சில தினங்களுக்கு பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடகிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும் விசேடமாக மாலை நேரம் அல்லது இரவில் மலை அல்லது இடியுடன் மழை பெய்யும்.
மேல், வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணத்திலும், திருகோணமலை மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, மின்னல் மற்றும் கடும் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.



















