நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 6 பேர் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 6 பேரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,602 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் தற்போதும் 394 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 36 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.