சஜித் பிரேமதாஸவின் தந்தை தான் கருணாவுக்கும், புலிகளுக்கும் ஆயுதம் வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது கருத்து தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக கருணா அம்மான் தெரிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களை கொல்வதற்கும், இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் ஆயுதம் வழங்கிய பிரேமதாஸவின் பிள்ளை தான் தற்போது கருணா அம்மான் தொடர்பில் பொய்யான முறையில் கோஷமிடுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.