கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.



















