ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகச்சிறந்த தலைவர். இந்த நாட்டை சிங்கப்பூர் போன்று மாற்றியமைக்க உறுதி பூண்டுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.
சலுகைகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு முஸ்லிம் பெண்களும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த முன்வர வேண்டும் .
உடுநுவர தொகுதி பெண்களுக்கான விஷேட கலந்துரையாடல் கண்டி கட்டுகஸ்தொட்டை வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன பிரதான தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார்.
புதியதொரு அரசியல் கலாசாரத்தையும் உருவாக்கியுள்ளார். இந்த நாட்டில் எந்தவொரு வருமானம் குறைந்த குடும்பங்களும் இருக்கக் கூடாது என்பதே ஜனாதிபதியின் பிரதான நோக்கமாகும் எனவுட் ஏ.எல்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.