பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவு கைதிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது உடற்பயிற்சி நேரத்தை அதிகரிக்க வேண்டும், வெளியே விடப்படும் சமயங்களிலும் ஒருவரோடு ஒருவர் பேச அனுமதிக்கப்படுவதில்லையென தெரிவித்தே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பிரிவில் இலங்கையின் முக்கியமான போதைப்பொருள் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


















