கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று (27) 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை மாலை 4 மணி வரை நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
கொழும்பு 13, 14, 15 ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கொழும்பு 01, 11 மற்றும் 12 பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்திலான நீர் விநியோகம் இடம்பெறும் என நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு கூறியுள்ளது.