வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழரின் வீடு ஒன்று மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் வெளிநாட்டில் நீண்டகாலமாக வசித்துவந்த நிலையில் தாயகத்திற்கு வந்து தனது வீட்டினை காணாது அதிர்ச்சியடைந்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அந்த வீட்டினை தனது வீடென அபகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் அதுதொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அத்துடன் அவர் தனது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து தான் வாழ்ந்து வந்த வீட்டினை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.



















