இந்திய இராணுவத்தினரை வெளியேற்றும் நோக்குடனேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கினார் என முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு நாளொன்றை வழங்கினார்.
மேலும் இந்திய இராணுவமானது, இலங்கையின் தேசிய கொடிக்கு பதிலாக, வடக்கு- கிழக்குக்கு என தனியான கொடியை அறிமுகப்படுத்துமாறு வரதராஜபெருமாளுக்கு கோரிக்கை விடுத்தது.
இத்தகைய செயற்பாட்டுக்கு ஜனாதிபதி பிரேமதாச எதிர்ப்பை தெரிவித்ததுடன் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார் என தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளார்.


















