கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் அம்பாறை, கல்முனை பொலிஸ்பிரிவு எல்லைக்குட்பட்ட தாளவட்டுவான் சந்தியில் புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
மருதமுனை பகுதியில் இருந்து நற்பிட்டிமுனை பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்த கனரக வாகனமும் நற்பிட்டிமுனை பகுதியில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கல்முனை பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கண்டியில் இருந்து பதுளை நோக்கி சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் ஒன்று அம்பேவலப் பகுதியில் தடம்புரண்டுள்ளமையினால் மலையகத்திற்கான ரயில்சேவை பாதிப்படைந்துள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் தெரித்துள்ளது.
குறித்த புகையிரதம் தடம்புரண்டமையினால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கின்ற புகையிரதமும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் புகையிரதமும் மாற்று வழியின் ஊடாக அனுப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் தடம் புரண்டமையினில் 58000ஆயிரம் லீற்றர் டிசல் வீண்விரயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடம்புரண்ட பகுதியினை சீர்செய்வதற்கான நடவடிக்கையினை புகையிரத கட்டுபாட்டு நிலையம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.



















