இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றவில்லை என்றால் இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பல நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததும் கட்டுப்பாடுகள் மற்றும் சட்டத்திட்டங்கள் தளர்த்தப்பட்டன. இதனால் குறித்த நாடுகளில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டது.
இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் சுகாதார முறையை பின்பற்றவில்லை என்றால் இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட கூடும்.
இதனால் ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சவர்க்காரமிட்டு கைகளை கட்டாயம் கழுவ வேண்டும்.
உரிய சுகாதார முறைகளை பின்பற்றவில்லை என்றால் இந்த நிலைமை மீண்டும் ஏற்படும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.