பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் எல்லா வயதினருக்கும் எல்லாவித உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா அல்லது ஏதாவது நோய் நம்மை தாக்கி உள்ளதா என்பதை சில அறிகுறிகள் மூலம் எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்
முதுகு வலி
பலருக்கும் இந்த முதுகு வலி பிரச்சினை என்பது தினமும் எட்டிப் பார்க்கும் விடயமாக உள்ளன.
முதுகு வலி வர முக்கிய காரணம் கனமான பொருளை குனிந்து தூக்குவதால் முதுகுப்புற தசைகளில் வேதனை உண்டாகிறது. மேலும் வயதாகுவதும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன.
இதிலிருந்து விடுபட ஓரே வழி உடற்பயிற்சி செய்வது தான். முதுகு வலி தொடர்ந்து குணமாகாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை காண வேண்டியது நலம் பெயர்க்கும்.
தலைவலி
வீட்டில் மற்றும் அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் இந்த தலைவலிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
போக்குவரத்து நெரிசல் சத்தம், குடும்ப மற்றும் நண்பர்கள் பிரச்சினை, ஆரோக்கியமற்ற உணவு முறையால் கூட தலைவலி உண்டாகும் தலைவலியை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றாலும் மன அழுத்தம் குறைய மருத்துவரை சந்தித்து நலம் பெறுவது சிறந்தது.
பல் கூச்சம்
பற்களின் எனாமல் நாம் உணவுகளை சுவைக்கும் போதோ அல்லது கடித்து உண்ணும் போதோ பற்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உதவும். இந்த எனாமல் பாதிப்படையும் போது சூடான அல்லது குளிர்ந்த உணவுகள் பற்களின் நரம்புகளில் பட்டதும் சுரீரென்று ஒரு வலி உண்டாகின்றன.
இதற்கு உள்ள ஒரே தீர்வு சாதாரண டூத் பேஸ்ட்டை பயன்படுத்தாமல் கூச்சத்தை போக்கும் சிறப்பான டூத் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். அப்படியும் சில வாரங்களில் பலன் கிடைக்காவிட்டால் பல் மருத்துவரை நாடிச் செல்வது சிறந்தது.
முடி உதிர்வு
ஒரு நாளைக்கு 50-100 முடிகள் வரை கொட்டினால் அது ஒரு சாதாரண விடயம் தான், ஆனால் தினமும் தலை வாரும் போது சீப்பிலும் தலையணையிலும் அதிகமான முடி உதிர்ந்தால் அதை கண்டிப்பாக கவனிக்கணும்.
தவறான உணவு முறைகள், மன அழுத்தம் போன்றவற்றால் கூட முடி உதிர்வு ஏற்படலாம். மன அழுத்தம் போன்றவற்றால் உங்களுக்கு முடி உதிர்தல் ஏற்பட்டால் மன அழுத்தத்தை குறைக்க முயல வேண்டும். அப்படியும் எந்த மாற்றமும் தெரிய வில்லையென்றால் சரும மருத்துவரை நாடுவது நன்மை பயக்கும்.
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல் என்பது நமது வயிற்றில் உண்டாகும் அசெளகரியமான நிலையாகும். வயிற்றில் இருக்கும் அமிலம் நம் உணவுக் குழாய் வழியாக மேலே எதுக்களிப்பதால் நெஞ்சு, தொண்டை மற்றும் வயிற்று பகுதியில் ஒரு எரிச்சல் ஏற்படுகின்றன.
அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள், ஆல்கஹால் குடித்தல், செயற்கை குளிர் பானங்கள் போன்றவை நமக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
அதிகமான உணவை உண்ணுவதையும், நெஞ்செரிச்சல் உண்டு பண்ணும் உணவுகளையும் தவிர்த்து நன்றாக தூங்கி மன அழுத்தத்தையும் குறைத்து வந்தால் இந்த நெஞ்செரிச்சல் குணமாகும். அடிக்கடி அல்லது தினமும் நெஞ்செரிச்சலால் அவதிப்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.



















