கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட மாதங்களில் அதிகரித்த மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி அந்த கால பகுதிக்காக மின்சார வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு யோசனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த நிவாரணம் வழங்க வேண்டிய முறை தொடர்பில் ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று நாளை நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்திய மார்ச், ஏபரல் மற்றும் மே மாதத்தில் மின்சார பட்டியல் பாரியளவு அதிகரித்துள்ளதாக மின்சார சபையில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


















