வடக்கு மியான்மரில் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 62 பேர் இறந்துள்ளதாகவும் 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று சகதியுடன் பெருவெள்ளம் உள்ளே புகுந்ததாகவும், உள்ளூர் நேரப்படி பகல் 6.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மரணமடைந்துள்ளதாகவும் இதுவரை 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் இன்னும் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேட் சுரங்கத் தொழிலாளர்கள் பெரும் மழைக்குப் பின்னர் ஏற்பட்ட சகதியுடன் கூடிய பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நிர்வாகம் தொடர்பில் வெளியிட்ட தகவலில் இதுவரை 62 பேர் இறந்துள்ளதாகவும் 13 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.




















