பிரித்தானியா வரலாற்றில் மிகப் பெரிய குற்றக்கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். தொலைபேசி வலையமைப்பின் ஊடாக பகிரப்பட்ட இரகசிய தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து, “உடைத்து“ இந்த கும்பலை பொலிசார் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல், கடத்தல், கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் தொடர்புடைய கும்பலே கைதானாது.
இந்த கும்பலிடமிருந்து 54 மில்லியன் பவுண்ட்ஸ் கறுப் பணமும் மீட்கப்பட்டது. பிரித்தானிய வரலாற்றில் குற்றக்கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அதிக பட்ச பணத்தொகை இது. 2 தொன் போதைப்பொருள், 77 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. 55 சொகுசு கார்களும் மீட்கப்பட்டுள்ளன.
இச் சுற்றிவளைப்பின் போது குறித்த கும்பலினால் உலகெங்கிலும் உள்ள குறித்த குழுவின் உறுப்பினர்களை தொடர்பு படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்ட ‘அசாத்தியமான’ இரகசிய தொலைபேசி வலையமைப்பு பொலிஸாரினால் சிதைக்கப்பட்டுள்ளது.
ஒப்ரேஷன் வெனெடிக் என பெயரிடப்பட்ட இந்த இரகசிய நடவடிக்கையின் மூலம் பிரித்தானியாவின் மிகபெரிய மாபியா கும்பலின் 100 க்கும் மேற்பட் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய குற்றவியல் நிறுவனம் ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்களுடன் இணைந்து இவர்களின் தொலைபேசி வலையமைப்பில் ஊடுருவி இவர்கள் பற்றிய தரவுகளை பொலிஸாருக்கு வழங்கியதையடுத்து இச் சுற்றிவளைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
என்க்ரோசாட் என்ற தொலைபேசி அமைப்பினுள் நுழைந்து(என்க்ரோச்சாட் என்பது ஒரு மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் அமைப்பாகும். இது வட்ஸ்அப்பைப் போன்றது) போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமக்கான வலையமைப்பு உருவாக்கியிருந்தனர். சம்பந்தப்படாத வெளியார் அந்த குழுவிற்குள் ஊடுருவமுடியாதபடி பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தரவிற்கும் 4 இலக்க இரகசிய குறியீடு உருவாக்கப்பட்டிருந்தது.
மே மாதத்தில், என்க்ரோச்சாட் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு, ‘சாதனங்களில் தீம்பொருள் நிறுவப்பட்டிருப்பதை’ அவர்கள் கண்டறிந்தனர். இது தொடர்பான எச்சரிக்கையையும் பயனர்களுக்கு அனுப்பியது.
நெதர்லாந்திலிருந்து வெளியேறிய இந்த நிறுவனம், விரைவாக மூடப்பட்டாலும், தொழில்நுட்ப கோளாறால் தொடர்ந்து இயங்கியது.
குற்றவாளிகள் அவற்றைப் பயன்படுத்த ஆறு மாத ஒப்பந்தத்திற்கு 1,500 பவுண்ஸ் செலுத்தினர். இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கு இவற்றை பயன்படுத்தி வந்தபோது, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் உள்ள வல்லுநர்கள் சட்டவிரோத தகவல் தொடர்பு வலையமைப்பில் ஊடுருவினர்.
இந்த வலையமைப்பில் உலகளவில் 60,000 பயனர்களையும், இங்கிலாந்தில் மட்டும் சுமார் 10,000 பயனர்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். போட்டி குற்றவாளிகளைக் கொல்லல், போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கி பயன்பாடு, கறுப்பு பணம், பணமோசடி மற்றும் சதித்திட்டங்களை ஒருங்கிணைக்க இந்த வலையமைப்பை பயன்படுத்தினர்.



















