இலங்கை அணி 2011ஆம் ஆண்டில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இன்று பகல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் மேற்படி விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றது.