காலையில் எழுந்து இரவு தூங்குவதற்கு முன் நாம் செய்யும் வேலைகளில் தாமதமாக செய்ய கூடாதவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
காலை
காலையில் அதாவது கண் விழிப்பதில் தாமதம் காட்டக்கூடாது. காலையில் பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லக்கூடிய 4-ல் இருந்து 6-மணிக்குள் கண் விழித்தே ஆக வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்திக்கொள்ளவேண்டும்.
பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிக்க பழகிக்கொண்டால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த விடியற்காலை பொழுதில் ஆக்சிஜனின் அளவு அதிகமாக இருக்கும்.அந்த ஆக்சிஜனை நாம் சுவாசிக்கும் போது உடலானது புத்துணர்ச்சி அடைகிறது.
பூஜை
பூஜைகளில் தாமதம் காட்டக்கூடாது.இப்பொழுது வேண்டாம் சிறிது நேரம் கழித்து பூஜை செய்து கொள்ளலாம், சிறிது நேரம் கழித்து இறைவனை வணங்கலாம் என்று காலத்தை தாமதிக்கக்கூடாது.
பூஜை பாத்திரங்களை கழுவதிலும் குடும்ப பெண்கள் தாமதம் காட்டக்கூடாது. தினமும் காலையில் பூஜையை முடித்த பின்பே காலை உணவை சாப்பிட வேண்டும்.
சமையல்
ஒரு குடும்ப தலைவியாக இருப்பவள் சமையலில் ஒரு போதும் தாமதம் காட்டக்கூடாது. சமையலை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.
நம் வீட்டிற்கு விருந்துண்ண வருபவர்களையோ அல்லது நம் சுற்றத்தாரையோ உண்ணும் உணவிற்க்காக காத்திருக்க வைக்கக்கூடாது. சமையல் செய்யவில்லை சிறிதுநேரம் பொறுங்கள் என்ற வார்த்தையும் குடும்ப தலைவி நாவில் இருந்து ஒருபோதும் உதிக்கக்கூடாது.