தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்ட இரு வேட்பாளர்கள் உட்பட 109 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கையில்,
பாராளுமன்ற தேர்தலை எதிர்வரும் ஆகஷ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து தற்போது பாராளுமன்ற தேர்தல் தொடர்பான சட்டவிதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதனால் , வேட்பாளர்களும், ஏனையோரும் அதற்கிணங்கவே செயற்பட வேண்டும் .
அவ்வாறு சட்டவிதியைமீறி செயற்படுவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டநடவடிக்கை எடுப்பார்கள்.
இந்நிலையில் தேர்தல் முறைக்கேடு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு 85 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அந்தவகையில் இன்று காலை 6 வரையில் இந்த விவகாரம் தொடர்பில் 109 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களுள் 107 பேர் கட்சிகளின் ஆதரவாளர்களும், இரு வேட்பாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 24 வாகனங்களை பெரிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.