ஐக்கிய நாடுகள் சபையின் 44வது கூட்டத்தொடரில் தமிழ் நாட்டிலும், தாயகப்பகுதியிலும் தமிழர்களுக்கு அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் விடயங்கள் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளோம் என்று தமிழர் இயக்கத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிசா தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கையில் நிலவி வரும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இன்றையதினம் அவர் வெளியிட்டுள்ள காணொளியிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக இலங்கையில் அரசியல் சார்ந்த செயற்பாடுகள், அரசியல் பிரச்சாரங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழிழர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சுக்கள் இடம்பெற்று தமிழ் உணர்வையும், தமிழின அழிப்பை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள நாங்களும் பல தரப்பட்ட விடயங்களை பேச் வேண்டுயுள்ளது.
நாங்கள் எங்கள் மண்ணை இழந்து பல கடின சூழ்நிலைகளுக்கு மத்தியில் இங்கு வாழ்கிறோம். அந்த வலி எப்பொழுதும் எங்களுக்கு இருக்கின்றது. ஆகவே அந்த வலியில் எங்களுக்கு எமது மண் சார்ந்து பேச உரிமையுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 44வது கூட்டத்தொடரில் தமிழ் நாட்டிலும், தாயகப்பகுதியிலும் தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் என்ற பெயரில் நடைபெற்று வரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பிலும், தமிழ் நாட்டில் நடந்த சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பிலும் எழுத்துமூலம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.