கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வங்கிக்கணக்கில் 1,400 இலட்சம் ரூபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரபல ஹெரோயின் விற்பனையாளரான மர்வின் ஜனா என்பவனிற்கு சொந்தமான பணமே, யாசகரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அண்மையில் கைதான மர்வின் ஜனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வங்கிக்கணக்கு விபரம் தெரிய வந்துள்ளது.
இந்த யாசகரின் பெயரில் அத்திடிய பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 11 மாதங்களாக பணம் வைப்பிலிடப்பட்டு வந்துள்ளது. மர்வின் ஜனாவின் வலையமைப்பில் இடம்பெற்ற போதைப்பொருள் வர்த்தகர்கள் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணத்தை அ்த வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டனர். கணக்கு ஆரம்பிக்கப்பட்டதும், வங்கிப் புத்தகம் மற்றும் வங்கி அட்டையென்பன, மர்வின் ஜனாவின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.