Herd Immunity கொரோனாவை வெல்லுமா என ஸ்பெயின் சந்தேகம் எழுப்பியுள்ளது.
Herd Immunity என்பது, ஒரு நாட்டில் போதுமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பின்னர், அவர்களுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் ஆன்டிபாடிகளில் மீண்டும் தொற்று ஏற்படாது என்பதே.
ஆனால் தற்போதைய வைரஸுக்கு விரைவில் Herd Immunity வேலை செய்யுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஸ்பானிஷ் ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
அதாவது 60,000-க்கும் அதிகமான மக்களை ஆய்வு செய்த போது, மக்கள்தொகையில் 5% மட்டுமே ஆன்டிபாடிகளை உருவாக்கியுள்ளதாக லான்செட் என்ற மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்படாதவர்களைப் பாதுகாக்க மக்கள் தொகையில் 70% முதல் 90% வரை ஆன்டிபாடிகள் உருவாக வேண்டும் என்று கருதப்படுகிறது.
இச்சூழலில், சமூக இடைவெளிகள் மற்றும் புதிய தொற்றாளர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களுடைய தொடர்புகளை அடையாளம் காணுவதே எதிர்காலத்தில் நிலைமையை சீராக்கும் என ஆய்வின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















