லண்டனில் விலை மதிப்புள்ள பொருட்களை வைத்திருந்த பணக்காரரிடம் திருடும் முயற்சியில் அவரை கொலை செய்த இருவருக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனை சேர்ந்தவர் பவுல் டாங் (54). இவர் தனது வீட்டு படுக்கையறையில் உடல் முழுவதும் படுகாயங்களுடன் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கிறிஸ்டோபர் மெக்டோனால்ட் (35) என்ற நபரையும், அலிசா எலிஸ் (31) என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
இருவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிறிஸ்டோபருக்கு ஆயுள் தண்டனையும், அலிசாவுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்க சதி திட்டம் போட்ட வழக்கிலும் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட பவுலின் நண்பர்கள் தான் கிறிஸ்டோபரும், எலிசாவும்.
பவுல் தனது வீட்டு படுக்கையறையில் விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச், போதை பொருட்களை கையாண்டு அதன் மூலம் கிடைத்த அதிக பணம் வைத்திருந்தார் என்பதை எலிசா தெரிந்து வைத்திருந்தார். இதோடு அங்கு மேலும் பல விலையுயர்ந்த பொருட்களும் இருந்துள்ளன.
இதை திருட கிறிஸ்டோபர் மற்றும் எலிசா திட்டம் போட்டு அவர் வீட்டுக்குள் சென்றனர்.
பின்னர் ஏற்பட்ட தகராறில் கிறிஸ்டோபர் உடற்பயிற்சி செய்யும் இரும்பு பொருளை வைத்து பவுலை சரமாரியாக அடித்து கொன்றுள்ளார், இதற்கு எலிசா உதவியுள்ளார்.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட எலிசா மற்றும் கிறிஸ்டோபர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்சமயம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.



















