அம்பாறை மாவட்ட முன்னாள் எம்.பி குணசேகரம் சங்கர் நேற்று கருணாவுடன் இணைந்துள்ளார்.
இவர் த.தே.கூட்டமைப்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவராவார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
இன்றைய சமகால அம்பாறை மாவட்ட சூழலில் அம்பாறைத் தமிழ் மக்களை மீட்கக்கூடிய ஒரே வல்லமை கருணாவுக்கு மட்டுமே உள்ளது.
மேலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கக்கூடிய திராணியும் சக்தியும் அவரிடமே உள்ளது.
அதனால் தான் இன்னும் மின்னும் ஏமாற்று அரசியலில் நிற்காமல் யதார்த்த அரசியலில் இணைந்து மக்களுக்காக சேவையாற்ற கருணாவுடன் இணைந்துள்ளேன்.
அம்பாறை மாவட்டத்தில் பிறந்த எனக்கு இங்குள்ள மக்களின் பூர்வீகத்தை நன்கு அறிவேன்.
நானும் ஒரு போராளியாக இருந்தவன். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் படும் இன்னல்களை துன்பங்களை அறிவேன். பாரிய பாரபட்சங்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்தவர்கள்.
காணி அபகரிப்புகள் நிலப்பறிப்புகளை இன்றும் சந்திக்கிறார்கள்.நான் எம்.பியாக இருந்த காலத்தில் என்ன செய்தேன் என்பதை மக்கள் அறிவார்கள் என்றார்.