கனடாவின் ஏழு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்றாறியோ, நுணாவட், வட மேற்கு பிராந்தியங்கள், கியூபாக், நியூ ஃபவுன்ட்லேண்ட் அண்ட் லேப்ரடர் ஆகிய மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இந்த காலநிலை முன் அறிவிப்பு எச்சரிக்கை விரிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிர், பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் கடும் மழை போன்றன குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூ பவுண்ட்லாந்து பகுதியில் பலத்த காற்றும் கடும் பனிப்பொழிவும் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கியூபெக்கில் சுமார் 25 சென்டிமீட்டர்கள் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் பிற்பகல் வேளையில் கடும் மழை பொழியும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் இதே விதமாக கடும் பனிப்பொழிவும் மழையும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுகுன், பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்கு பிராந்தியங்க்ள போன்ற பகுதிகளிலும் கடுமையான குளிர், பனிப்பொழிவு மற்றும் மழை தொடர்பில் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.