எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வாக்காளர்களாகிய மக்கள் தமது வாக்குகளை அதிகார சமநிலைக்காக பயன்படுத்தவேண்டியது அவசியமாகும்.
அதிகார சமநிலை பேணப்படும் போதே ஆட்சியாளர்களின் மூலம் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் லால் காந்த தெரிவித்துள்ளார்
செய்தியாளர்கள் மத்தியில் இன்றைய தினம் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2010ம்ஆண்டில் போர் வெற்றி நிகழ்ந்தவுடன் மஹிந்த ராஜபக்சவின் புகழ் உச்சத்தில் இருந்துபோதும் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 8 மாதங்களில் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான முயற்சியில் தோல்விக்கண்டுள்ளனர்.
இதேவேளை அரச பணியாளர்களின் வேதனங்கள் நீண்டகாலமாக உயர்த்தப்படவில்லை. 2016க்கு பின்னர் வேதனங்களில் உயர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் கோட்டாபயவின் அரசாங்கம் 26 அத்தியாவசியப் பொருட்களுக்கு விதித்த வரி காரணமாக வாழ்க்கை செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.