தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமஷ்டிக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தும் எந்தவொரு புதிய நடவடிக்கைக்கும் இந்த அரசாங்கம் இணங்காது என இன்று கெய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளுக்கான தீர்வை தேடுவதற்கு அப்பால் அதிகார பகிர்விற்கான தீர்வை தேடுவதாயின் எப்போதும் அவர்களுக்கான தீர்வு கிடைக்காது.
தெற்கிலுள்ள மக்களுக்கும் வடக்கிலுள்ள மக்களுக்கும் சமமான முறையில், மகிழ்ச்சியயை வழங்க கூடிய வகையிலான தீர்வுக்கு செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.