உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வந்தது. இதனால் உலகம் முழுவதிலும் 210 க்கும் அதிகமான நாடுகள் கடுமையான அழிவை சந்தித்தது. பொருளாதார ரீதியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
சீன நாட்டில் இருந்து பரவிய இந்த தொற்றை, சீனா திட்டமிட்டு உலகிற்கு பரப்பியுள்ளது என்றும், சீனா கொரோனா தொடர்பாக பல விஷயங்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மறைந்துள்ளது என்றும் அமெரிக்கா துவக்கத்தில் இருந்து குற்றம் சுமத்தி வந்தது.
மேலும், உலக சுகாதார அமைப்பும் – சீனாவும் ஓரணியில் ஒன்றுக்கொன்று கைப்பாவையாக இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும், உலக சுகாதார அமைப்பிற்கு தேவையான நிதி உட்பட அனைத்து சேவையையும் கணக்கில்லாமல் வழங்கிய அமெரிக்காவிற்கு உலக சுகாதார அமைப்பு உண்மையாக இல்லை என்றும் அமெரிக்கா குற்றம் சுமத்தியது.
துவக்கத்திலேயே உலக சுகாதார அமைப்பிற்கான நிதி இனி வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்த நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் தெரிவித்தது. இந்நிலையில், தற்போது அதிகாரபூர்வமாக அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான கடிதத்தை வெளியிட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















