பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ரன். கிருஷ்ணா – சாயா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்தொடரில் விஜித் ருத்ரன் வில்லனாக நடித்திருந்தார்.
கொரொனா ஊரடங்கு அமல்படுத்தும் வரை இது 197 எபிசோட்கள் ஒளிபரப்பான நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜித் தனது சொந்த ஊரில் வினோதினி என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.
இவரின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ரசிகர்கள் வாழ்த்து கூறியதற்கு உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார் விஜித்.
அவருடைய புகைப்படங்களை பார்த்து சின்னத்திரை பிரபலங்களும் திரைப்படத்துறையினர் களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.