வடமாகாண கல்வியமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் உள்ள ஆசிரியர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என சான்றழிக்கப்பட்டவர்களை விசேட மருத்துவக்குழுவின் முன்பாக பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வியமைச்சின் கீழ் பணியாற்றுபவர்களில் 184 பேர், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்து, கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடாமல் உள்ளனர்.
இவர்களின் இடத்திற்கு பாடசாலைகளில் மாற்று ஆளணியை ஏற்படுத்த முடியாமலுள்ளதுடன், மாகாண நிதியும் விரயமாவதாக மாகாண கல்வியமைச்சு கருதுகிறது. இவர்களின் விடயத்தில் மாற்று ஏற்பாடொன்றை கண்டறிவது, மாகாண கல்வி செயற்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாமென கல்வியமைச்சு கருதுகிறது.
இதனால், இந்த 184 ஆசிரியர்களில் முற்கூட்டியே சுயவிருப்புடன் ஓய்வுபெற்று செல்ல விரும்புபவர்களை ஓய்வூதியத்துடன் ஓய்வுபெற வழியேற்படுத்தவும், ஏனையவர்களை கல்வியமைச்சினால் நியமிக்கப்படும் மருத்துவக்குழுவின் முன்பாக தோன்றி பரிசோதனை மேற்கொள்ளவும், பரிசோதனை முடீவுகளின்அடிப்படையில் தீர்மானம்மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பரிந்துரை மாகாண ஆளுனரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


















